மே மாதம் முதலாம் திகதியளவில் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என தம்புள்ளயில் வைத்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பௌத்த சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமக்கிருக்கும் தடங்கல்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என பௌத்த துறவிகள் முன் வைத்த வேண்டுகோளும் பரசீலிக்கப்பட்டு இலங்கையின் பௌத்த சமூகத்தை வலுவூட்டும் வகையிலான திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஓரிரு தினங்களுக்குள் முறையான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இம்மாதம் முற்பகுதியில் அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment