வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,
இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பது என இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டு வந்துள்ளோம்.
நாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும் நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன் வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.
-JO
No comments:
Post a Comment