பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலசுக அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டு இன்று கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டுமு பிரதமருக்கு எதிராக வாக்களித்ததாக குற்றஞ்சாட்டியே சு.க உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டிருந்தது.
எனினும், கூட்டாட்சி தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை நீக்கிக் கொள்ளுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment