நெருக்கடிகளை சந்தித்து, நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டுள்ள நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றத்துக்கு அவசியமில்லையென அக்கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கட்சிக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இதற்கான கருத்துக் கணிப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை அதிகமானோர் ரணிலே அப்பதவியில் தொடர வேண்டும் என வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏனைய பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கான பெயர்களை முன்மொழிய 12 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இம்மாத இறுதிக்குள் மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment