தனக்குத் தேவையானவர்களைக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகம் மஹிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலில் இலகுவாக வெற்றி பெறச் செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நா.உ பவித்ரா வன்னியாராச்சி.
கட்சியின் தலைமை நிர்வாகிகளின் பலமே அக்கட்சியின் அடி மட்டத் தொண்டர்களை வலுப்படுத்தும் எனவும் ரணிலின் தற்போதைய தெரிவு மஹிந்த அணிக்கு சாதகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படு தோல்வியுற்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாக மாற்றங்களை செய்து வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment