லண்டன்: மைத்ரிக்கு எதிராக தமிழ் சமூகம் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 19 April 2018

லண்டன்: மைத்ரிக்கு எதிராக தமிழ் சமூகம் போராட்டம்



இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நேரடி எதிர்ப்பையும் கேள்விக்கணைகளையும் ஜனாதிபதி எதிர்கொண்டிருந்த நிலையில் இன்று தமிழ் சமூகம் லண்டனில் மைத்ரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.



மைத்ரியே திரும்பிப் போ, தமிழீழமே தீர்வு போன்ற கோசங்களை முன் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டிருந்தனர்.

2015ல் மைத்ரி அங்கு சென்ற போதும் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த அதேவேளை அதனை எதிர்கொண்ட மைத்ரி கையை அசைத்துச் சென்றிருந்தார். எனினும் இம்முறை பலவீனமான ஜனாதிபதி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment