பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்று நேரத்தில் இடம்பெறவுள்ள நிலையில் தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளார் நா.உ அத்துராலியே ரதன தேரர்.
நீதி மன்றில் முடிவெடுக்கப்படாத ஒரு விடயத்துக்கு பௌத்த துறவியெனும் அடிப்படையில் தன்னால் வாக்களிப்பில் பங்கேற்க முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.
ஊழலுக்கு ஆதரவாகவும் தன்னால் செயற்பட முடியாதெனினும் இன்னும் தீர்மானிக்கப்படாத விடயம் என்பதால் தான் தவிர்த்துக்கொள்ளவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment