கிண்ணியா மூதூர் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

கிண்ணியா மூதூர் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி


மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் பலர் கடற்படையினரால் கைதுசெய்யப்பபட்டதால் தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாம் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் ஏனைய மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக தமது தொழிலை முன்னெடுக்கின்ற போதும் திருகோணமலை மாவட்ட மீனவர்கள் குறிப்பாக கிண்ணியா மூதூர் கருமலையூற்று மீனவர்கள் கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்வது பற்றி கிண்ணியா நகர சபை உறுப்பினர் ரிஸ்வி, வேட்பாளர் கால்தீன், மீனவசங்க தலைவர் பாயிஸ் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகளால் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் முறையிடப்பட்டது.

இந்த பிரட்சினை தொடர்பாக இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கலைந்துரையாடினார் இதன்பின் மீனவர்களை சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு திருகோணமலை கடற்படைக்கு அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரட்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும் பொருட்டு விரைவில் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்திப்பதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

-Sabry

No comments:

Post a Comment