நாடாளுமன்ற அனுமதி கிடைத்தால் மா.சபை தேர்தல்: தேசப்பிரிய! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

நாடாளுமன்ற அனுமதி கிடைத்தால் மா.சபை தேர்தல்: தேசப்பிரிய!


மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தினை நாடாளுமன்றம் அடுத்த ஒரு மாதத்துக்குள் அங்கீகரித்தால் இவ்வருடமே ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த முடியும் என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


வட-மத்தி, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடாத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், நாடாளுமன்றம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் எல்லை நிர்ணயத்தை அங்கீகரித்தால் ஏனைய சபைகளுக்குமான தேர்தல்களையும் நடாத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்போடப்பட்டு வந்த உள்ளூராட்சித் தேர்தலை இவ்வருடம் பெப்ரவரியில் நடாத்தி அரசாங்கம் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment