முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளின் பின்னணியில் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி போராட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில் பிரான்ஸ் சென்றுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா அங்குள்ள இலங்கை முஸ்லிம்களை சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் ஐ.நா சென்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அரச பிரதிநிதியாக 'சமாளிப்பு' நடவடிக்கையில் ஈடுபட்டதாக முஸ்லிம் சமூகம் பைசர் முஸ்தபா மீது அதிருப்தியுடன் உள்ள நிலையில் இச்சந்திப்புக்கான முயற்சி இடம்பெறுகிறது.
இந்நிலையில், தூதரகம் ஊடாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பிரான்ஸைத் தலைமையமாக கொண்டு இயங்கி வரும் யாழ் சர்வதேச முஸ்லிம் அமைப்பு (JMC-I) புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி லண்டன் சென்றுள்ள நிலையில் அங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-M.Sajid
No comments:
Post a Comment