இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக ஹம்பாதோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்:
இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி வருகிறது.
மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் பெறுபேருகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் எதை இந்த அரசாங்கம் செய்யவில்லை.
அமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
-JO
No comments:
Post a Comment