நல்லாட்சியென கூறிக்கொண்ட தமது அரசின் நடவடிக்கைகள் மீது தமக்கு முழு அளவில் திருப்தியில்லையென தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் அமைச்சர் அஜித் பெரேரா.
பெப்ரவரி 10ம் திகதி மக்கள் வழங்கிய எச்சரிக்கையும் அதனையே எடுத்துக் கூறுவதாகவும் அதிலிருந்து தமது கட்சி மீளெழ வேண்டிய சூழ்நிலையை இன்று உருவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ள அவர், மரண தண்டனைக்குரியவர்கள் கூட தம் முன்னால் நாடாளுமன்றில் அமர்ந்திருப்பதாகவும் அவர்களுடன் சபையில் வீற்றிருக்கும் அவல நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான தனதுரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் அரசின் தவறுகளை உள்ளிருந்தே திருத்தும் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment