ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கேற்பவே தாம் தமது நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ள திலங்க சுமதிபால, தமக்கு ரணிலோடு தனிப்பட்ட குரோதம் எதுவுமில்லையென தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது பேச்சின் போது தொடர் கூச்சலும் குழப்பமும் நிலவியதால் திலங்க நிலை குலைந்து காணப்பட்டதுடன் தன்னை நியாயப்படுத்த பாரிய முயற்சியெடுத்திருந்தார்.
இதற்கிடையில் பிரதி சபாநாயகராக அவர் பக்கசார்பாக பேச முடியாது எனவும் ஐ.தே.க தரப்பிலிருந்து ஆட்சேபனை வெளியிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே உரையாற்றுவதாக சபாநாயகர் பதிலளித்திருந்தமையும் திலங்க சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதற்கு ஐ.தே.க முன்கூட்டியே ஆட்சேபனை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment