இங்கிலாந்தின் நீண்ட கால ஆட்சியாளரான ராணி இரண்டாம் எலிசபத் முஹம்மத் நபியின் வழித்தோன்றல் என 1986ம் ஆண்டு வெளியான தகவல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இணைய உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களாக பல்வேறு முக்கிய ஊடகங்களிலும் இச்செய்தி இடம்பிடித்துள்ள நிலையில் 43 தலைமுறைத் தொடர்புகளின் பின்னணியில் தற்போதைய ராணியார், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகியின் புதல்வர் ஹசன் (ரழி) அவர்களின் வழி வந்த குடும்ப தொடர்புகளைக் கொண்டுள்ளதாக 1986ம் ஆண்டு பிரித்தானியாவின் பிரபல மரபு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Burke's Peerage நிறுவனம் வெளியிட்ட தகவல் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
14ம் நூற்றாண்டு ஸ்பெயின் ஆட்சியாளர்களின் வழியில் இத்தொடர்பு நிறுவப்படுகின்ற அதேவேளை ஒரு சில வரலாற்றாசிரியர்கள் இதனை நிராகரிக்கின்றதோடு பலர் இதற்கு சாதகமாகவும் கருத்து வெளியிட்டு வருவதாக சோனகர்.கொம் பிரித்தானிய செய்திப் பிரிவு தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment