சவுதி அரேபியாவில் பெண்களுக்கான முதலாவது பிரத்யேக சைக்கிள் ஓட்டப் போட்டி செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.
ஜித்தாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 47 பெண்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னர் சல்மானின் புதல்வர் முஹம்மத் பின் சல்மான் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்பாக பல்வேறு பெண்கள் அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதன் தொடர்ச்சியில் இவ்வாறு சைக்கிள் ஓட்டப் போட்டியும் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையிலேயே சவுதி பெண்களுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment