சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப மாட்டோம்: கட்டார் - sonakar.com

Post Top Ad

Sunday, 29 April 2018

சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப மாட்டோம்: கட்டார்


அமெரிக்கர்களின் ஆதரவில் தமது நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கட்டார், சிரியாவில் அமெரிக்க இராணுவத்துக்குக் கை கொடுக்க இராணுவத்தை அனுப்ப வேண்டும் என அண்மையில் சவுதி அரேபியா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்துள்ள கட்டார், தமக்கு அவ்வாறு ஒரு தேவையும் இல்லையென தெரிவித்துள்ளது.


சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றை நிராகரித்துள்ள கட்டார், சவுதி அரேபியா அமெரிக்காவுடனான தமது உறவை திரிபுபடுத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளது.

12,000 உறுப்பினர்களையே கொண்ட கட்டார் இராணுவம் பிராந்தியத்தில் அளவில் சிறியதாகும். இதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாரிய இராணுவ தளம் கட்டாரிலேயே அமையப்பெற்றுள்ளமையும் அந்நாட்டைத் தாமே பாதுகாத்து வரும் நிலையில் கட்டார், சிரியா விவகாரத்தில் மேலும் பண ரீதியான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அண்மையில் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment