ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை ஓரணியில் திரட்டி கட்சியைக் கட்டியெழுப்புவதே தமது முதற் பணியென தெரிவித்துள்ளார் அக்கட்சியின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள அகில விராஜ் காரியவசம்.
கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில் நிர்வாக மட்டத்திலான மாற்றங்களை அறிமுகம் செய்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி புதிய செயலாளர், பொருளாளர் மற்றும் தவிசாளரையும் நியமித்துள்ளது.
இதேவேளை, தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளில் முறையே ரணில், சஜித் மற்றும் ரவி நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment