மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இதேவேளை, மேலும் ஒரு முக்கிய நபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் மின்னஞ்சல் முகவரி கூட தெரியாத நிலையில் அரசாங்கம் 'தேடிக்கொண்டிருப்பதாக' தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment