மத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா த பரீட்சையில் வெற்றி பெற சிறந்த வழிகாட்டல்கள் அவசியம். கொழும்பில் பின்தங்கிய மாணவர்களை இலக்காக வைத்து அவர்களின் தேர்ச்சி மட்டத்தையும், பெறுபேற்றையும், கல்வித் தரத்தையும் அதிகரிக்கும் நோக்கில்; ஆரம்பிக்கப்பட்ட CDDF ன் செயற்றிட்டம் வெற்றியளித்திருப்பதை கண்டு நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
கொழும்பு மாணவர்களின் கல்விப்பிரச்சினை எமது சமூகத்தின் அடிப்படை பிரச்சினையாகும். அதனைத் தீர்ப்பதற்கு இந்த மக்களோடு மக்களாக வாழும் எங்களுக்கு இலகுவான காரியமாகும். இந்த மக்களின் வாழ்க்கையையும், இந்த மக்களின் இதயத்துடிப்பையும் நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள். எனவே இந்த மக்களின் பிள்ளைகள எதிர்நோக்கும்; கல்விப் பிரச்சினையை உணர்வுபூர்வமாக எங்களால் அணுக முடிகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறினார்.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கூட்டம் நேற்று கொழும்பு 10 அஷ்ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே பாராளுமனற் உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
-MR
No comments:
Post a Comment