நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்ட கையோடு நாளைய தினம் முதல் புதிய அமைச்சரவைக்கான தெரிவுகள் இடம்பெறும் எனவும் திங்கட்கிழமை அளவில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாகும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
எஸ்.பி. திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்த நிலையில் 122:76 எனும் வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்த்தரப்புக்கு செல்பவர்கள் அரசில் பங்கேற்க முடியாது என தொடர்ச்சியாக ஐ.தே.க தரப்பு தெரிவித்து வந்தமையும் ஹிஸ்புல்லா, பைசர் முஸ்தபா மற்றும் பௌசி ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்காததுடன் காதர் மஸ்தான் பிரேரணையில் ஒப்பமிட்டிருந்த போதிலும் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment