ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மரணத்துக்கு தேதி குறித்து சர்ச்சையில் சிக்கிய சோதிடர் விஜேமுனி கோத்தபாய ராஜபக்ச இந்நாட்டில் இரு தடவைகள் ஜனாதிபதி பதிவி வகிக்கும் ராஜயோகத்தைக் கொண்டுள்ளதாக ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
பெதுஜன பெரமுன சார்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்காத நிலையில் பசில் ராஜபக்சவை திட்டித் தீர்த்திருந்த அவர், மஹிந்த ராஜபக்ச பிரதமராவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தினேஷ் குணவர்தன விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment