அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த விஜேதாச ராஜபக்ச, நேற்றைய தினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளார்.
நீதியமைச்சராக இருந்த விஜேதாசவே பல மஹிந்த கால ஊழல் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அரசின் பல்வேறு நடவடிக்கைகளை சட்டரீதியாகக் கேள்விகுட்படுத்தி விமர்சித்து வந்த போதிலும் நேற்றைய தினம் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளார்.
இதேவேளை, பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 75 கோடி ரூபா சன்மானம் வழங்கப்பட்டிருப்பதாக அவரது புதல்வர் நேற்று காலையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment