கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறையின் பின்னணியில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உட்பட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சுதந்திரமாக திகன பகுதிகயில் அலுவலகம் வைத்து இயங்கி, இனவாதத்தைத் தூண்டி விட்ட அமித் வீரசிங்க உட்பட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கைதுகள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்த அணியின் சார்பில் அண்மையில் குண்டசாலை பிரதேச சபைக்குத் தெரிவான நபர் ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment