ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் பிரளயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை முன்னெடுத்து வந்த கூட்டாட்சியை எஞ்சியிருக்கும் காலப்பகுதி வரை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான பாரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையிலான அவசர சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.
மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலசுகட்சி பலவீனமான நிலையை அடைந்துள்ள போதிலும், கூட்டாட்சிக்கு ஒத்துழைக்க விரும்புவோரின் பங்களிப்புடன் புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment