பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.
இவ்விஜயத்தின் போது இலங்கை முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் குழுக்கள் இரண்டினை தனித்தனியாக சந்தித்திருந்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் குறித்தும் நேரடியாக தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதாக உறுதியளிக்க முடியாத சூழ்நிலையில் சந்திப்புகளை முடித்துக் கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment