கூட்டாட்சி அரசு இறுதி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அரசு கவிழும் எனவும் தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
மஹிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்றுள்ள போதிலும் அதன் மூலம் சு.கட்சிக்குள் மேலும் பிளவுகள் உருவாகியுள்ளது. இந்நிலையில், அரசைக் கவிழ்ப்பதற்கான தமது முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும் மஹிந்த அணி சு.க அதிருப்தியாளர்களையும் இணைத்துக் கொள்ள முயன்று வருகிறது.
எனினும், நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்ற அதேவேளை கட்சி மீள் கட்டமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையிலேயே கூட்டாட்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக வெல்கம தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment