பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீலசுகட்சியின் ஒரு பகுதியினர் வாக்களித்த அதேவேளை மேலும் ஒரு பகுதியினர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் மைத்ரி மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக நாமல் உட்பட கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆதரவளித்த மற்றும் தவிர்ந்து கொண்ட இரு குழுவும் கட்சித் தலைமையில் உத்தரவின் பேரிலேயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக விளக்கமளித்து வருகின்ற நிலையில் மைத்ரி தரப்பின் மனமாற்றம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெல்லுமிடத்து நிமல் சிறிபால டிசில்வாவை பிரதமராக நியமிப்பதாகவே மஹிந்த தரப்பு ஆரம்பத்தில் தெரிவித்து வந்த போதிலும், விவாத நாள் நெருங்கிய நிலையில் அது வெறும் தற்காலிகத் திட்டமே எனவும் மூன்று மாதங்களில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் திட்டம் எனவும் அத்துடன் உடனடியாக நிதி மோசடி விசாரணைப் பிரிவைக் கலைப்பது அடுத்த செயற்பாடு எனவும் தகவல் கசிந்ததன் பின்னணியிலேயே சுதாரித்துக் கொண்ட மைத்ரி அணி தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே மைத்ரி நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment