கொஸ்கொட பொலிஸ் பிரிவில் இந்துருவ, அத்துருவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் முஹம்மத் இஸ்மாயில் என அறியப்படும் பிரித்தானிய பிரஜையொருவர் உட்பட இருவர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவங்களோடு தொடர்புள்ளவராகக் கருதப்படும் சமன் பெரேரா எனும் நபரும் பிரித்தானிய பிரஜாவுரிமையுள்ள குறித்த நபரும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சமன் பெரேராவுக்கும் கொஸ்கொட சுஜீ என அறியப்படும் பாதாள உலக பேர்வழிக்குமிடையில் பகை நிலவுவதாகவும் பொலிசார் தெரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment