உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பொட்ட நௌபர் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி பதுளை சிறைச்சாலையில் புது வருட போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டே இவ்வாறு நௌபர் பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரம் மற்றும் பெட்மின்டன் போட்டிகளில் நியாஸ் முகமத் நௌபர் எனும் இயற்பெயர் கொண்ட குறித்த நபர் பரிசுகள் வென்றுள்ளதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment