பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்ற அதேவேளை தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது உறுதியென தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாடாளுமன்றுக்கு வெளியில் இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளையே சபைக்குள்ளும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மறுதலிப்பில் ஈடுபட்டு வருவதால் சபையில் பாரிய கூச்சலுடனான சூடான விவாதம் இடம்பெற்று வருகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையை இலகுவாக முறியடிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment