சிரியாவை வைத்து 'விளையாடும்' டொனால்ட் ட்ரம்ப்! - sonakar.com

Post Top Ad

Thursday, 12 April 2018

சிரியாவை வைத்து 'விளையாடும்' டொனால்ட் ட்ரம்ப்!


சிரியாவை நோக்கி அமெரிக்காவின் நவீன ஏவுகணைகள் வருகிறது, ரஷ்யா தயாராகட்டும் என்று நேற்று ட்விட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்த டொனால்ட் ட்ரம்ப், நான் எப்போதென்று சொல்லவில்லையே, அது எப்போதாவது நடக்கலாம் என இன்று வெளியிட்டுள்ள தகவல் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என சர்வதேச அவதானிகள் தெரிவித்துள்ளனர்.



கடந்த வாரம் சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவித்து அங்கு தாக்குதலை நடாத்த முயன்ற நிலையில் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தத் தயாரா இருப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ட்ரம்ப் தற்போது வேறு தொனியில் பேசி வருகின்றமையும் இதற்கிடையில் தம்மிடம் இரசாயன தாக்குதலுக்கான ஆதாரம் இருப்பதாக இன்று பிரான்ஸ் தெரிவித்துள்ளமையும் இவையனைத்துமே திட்டமிட்ட நாடகம் என ரஷ்யா தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment