யெமன் எல்லைப்பகுதியிலிருந்து சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய பிரதேசங்களை நோக்கி ஹுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை வானில் வைத்து முறியடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சவுதி அரேபியா.
ஈரானிய ஆதரவில் இயங்கும் குறித்த குழுவினர் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல் நடாத்த முனைகின்ற அதேவேளை தமது வான் பாதுகாப்பு பிரிவு வானில் வைத்தே ஏவுகணைகளை தாக்கியழித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை வழங்குவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment