நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள திலங்க சுமதிபாலவின் வசமிருக்கும் கிரிக்கட் கட்டுப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் அர்ஜுன ரணதுங்க தீவிரமாக இறங்கியுள்ளார்.
நீண்ட காலமாகவே திலங்க குறித்த பதவியிலிருப்பதற்கு எதிராக குரல் கொடுத்து வந்த அர்ஜுன தற்போது அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளதுடன் பிரதமருடன் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கட் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் நிர்வாக சீர்கேட்டுக்கு திலங்க மற்றும் தயாசிறி ஜயசேகரவே காரணம் என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment