திஹாரி பகுதியை அண்மித்து இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணி அறியப்படவில்லையாயினும் மீண்டும் இனவாதம் துளிர் விடுகிறதா எனும் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளது.
நிப்பொன் செரமிக்ஸ் என அறியப்பட்ட வர்த்தக நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள அதேவேளை தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment