கொடகம பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகளைக் கைவசம் வைத்திருந்த நிலையில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு இடங்களில் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் நன்கு பரீட்சயமிக்க குறித்த நபர் ரி56, 9எம்.எம். மற்றும் .22 எம்.எம் துப்பாக்கி ரவைகள் 1150 உடன் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து கொடகம பகுதிக்கு குடியேறியிருந்த நிலையில் பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment