அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 April 2018

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் கைது


அங்கொட லொக்கா என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழியில் இரு நெருங்கிய சகாக்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சீட்டி மற்றும் சரா மல்லி என அறியப்படக்கூடிய சரத் குமார மற்றும் சரத் பண்டிதரத்ன ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



கொட்டிகாவத்தை மற்றும் பொரலஸ்கமுவ பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சீட்டியிடம் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment