மூன்று வாரங்களுக்குள் அரசு கவிழும்: தினேஷ் ஆரூடம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

மூன்று வாரங்களுக்குள் அரசு கவிழும்: தினேஷ் ஆரூடம்!


இன்னும் 21 நாட்களுக்குள் அரசாங்கம் கவிழும் என ஆரூடம் வெளியிட்டுள்ளார் பொதுஜன பெரமுன முக்கியஸ்தா தினேஸ் குணவர்தன.


நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்பாகவே அனைத்து கட்சிகளும் தீர்மானித்திருந்த போதிலும் இறுதித் தருவாயில் மைத்ரிபால சிறிசேன தனது முடிவை மாற்றியதன் விளைவிலேயே ரணில் தப்பிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எவ்வாறாயினும் தற்போது 16 பேர் விலகியுள்ளதுடன் அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2020ல் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும் என அக்கட்சி சார்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment