அரசாங்கம் 'கேலிக் கூத்து' ஆக்கப்பட்டுள்ளது: ரவி - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 April 2018

அரசாங்கம் 'கேலிக் கூத்து' ஆக்கப்பட்டுள்ளது: ரவி



நல்லாட்சி அமையப் போவதாக மக்களை நம்பவைத்து கேலிக் கூத்தே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.


தேவையில்லாத பிரச்சினைகளை பூதாகரமாக்குவதோடு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பணியை மறந்து அரசாங்கம் தவறான பாதையில் செல்வதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களோடு முன் நின்று போராட வந்த தனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு அரசு தயங்கத் தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment