ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார் அமைச்சர் மலிக் சமரவிக்ரம.
ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான மலிக் சமரவிக்ரமவே பல்வேறு ஊழல்களின் பின்னணியில் இருப்பதாக கட்சி மட்டத்தில் பாரிய குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கிய இடரான கால கட்டங்களில் கை கொடுத்த நன்றிக் கடனுக்காக ரணில் விக்கிரமசிங்க அவரை கௌரவப்படுத்துவதாகவும் அபிமானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் நிர்வாக மட்ட மாற்றங்களுக்கு வழி விடும் வகையில் கபீர் ஹாஷிமைத் தொடர்ந்து தானும் விலகிக்கொண்டுள்ளதாக மலிக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment