ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று நாட்டில் இருக்கும் சிறப்பான செயல் வீரர் எனவும் அவரது தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி புதிய பாதையில் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார் மேர்வின் சில்வா.
தற்போதிருக்கும் தடைகளையும், சோம்பேறிகளையும் அகற்றி கட்சியைப் புனரமைப்பதோடு தகுந்த செயற்பாட்டு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள மேர்வின் ரணிலைத் தவிர நாட்டை முன்னேற்றவும் ஆளில்லை என்கிறார்.
எந்தக் கட்சியிலும் இடம் கிடைக்காத நிலையில் புதிய கட்சியொன்றை உருவாக்கப் போவதாகவும் முன்னர் மேர்வின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment