பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களில் பாதிப் பேரை இன்று சபையில் காணவில்லையென தெரிவித்துள்ளார் அமைச்சர் நவின் திசாநாயக்க.
நம்பிக்கையில்லா பிரேரணை மீது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தனது 18 வருட கால நாடாளுமன்ற அனுபவத்தில் மூன்று நம்பிக்கையில்லா பிரேரணைகளை சந்தித்துள்ளதாகவும் அவற்றுள் எந்தவித அடிப்படையும் இல்லாமல் மோசமான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட பிரேரணை இது எனவும் தெரிவித்துள்ளார்.
மாலை வேளையில் வாக்களிப்பிலாவது கையொப்பமிட்டவர்களும் தலைமை தாங்கியவர்களும் கலந்து கொள்வார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் இருந்த போதிலும் பிரேரணை தோற்கடிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment