நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியைத் தொடர்ந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் வரும், எதிர்த்து வாக்களித்த சு.க உறுப்பினர்கள் அற்ற ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி தொடரும் என நம்பிக்கை வைத்திருந்த ஐ.தே.க பின் வரிசை உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மாற்றமும் மேலும் தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை திங்கட்கிழமை அறிவிப்பு வரும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையில் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரணில் - மைத்தி சந்திப்பையடுத்தே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தாண்டுக்கு முன் அறிவிப்பு வெளியாகிவிடும் எனவும் அகில நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment