மைத்ரிபால சிறிசேனவை நம்பி நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தது மாபெரும் தவறு என தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத தலைமையே மைத்ரி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், மைத்ரியின் பேச்சை நம்பி 16 பேர் வாக்களித்ததாகவும் ஏனையோர் நம்ப வைத்து கைவிட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
ஒரு சில சு.க உறுப்பினர்கள் தாம் கட்சித் தலைமையின் முடிவுக்கமையவே ஆதரவாக வாக்களித்ததாக தெரிவித்துள்ள அதேவேளை மேலும் சிலர் அதே கட்சித் தலைமையின் முடிவுக்கமையவே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையெனவும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment