வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி



கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி - லொறி மோதியதில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரழந்தவர்களுள் பெண்ணொருவரும், பெண் குழந்தையொன்றும் உள்ளடக்கம் என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



உயிரிழந்தவர்கள் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment