தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்ற அதேவேளை அது தனி மனிதனைக் காப்பாற்றுவதற்காக அன்றி கூட்டாட்சியைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாகவே இருந்ததாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமதுரையின் போது கட்சித் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையிலேயே பேசியதோடு சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றோர் எதிர்க்கட்சியின் ஊழல்களையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய வெற்றி மற்றும் பெப் 10ம் திகதி கிடைத்த 'பாடம்' போன்றவற்றின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை செப்பனிடப்படும் எனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment