நீண்ட காலம் நிலவி வந்த கொரிய யுத்தம் நிறைவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
வடகொரியாவைத் தாக்கப் போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தி வந்த நிலையில் அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணு ஆயுதம் கொண்டு தாக்கியழிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளதை வடகொரியா நிரூபித்திருந்தது.
இந்நிலையில், இன்று வட மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதுடன் கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கும் உடன்பட்டுள்ளனர். இதன் பின்னிணியிலேயே ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment