File photo
மிதிகம பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஞாயிறு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 15ம் திகதி மிதிகம கடற்கரைப் பகுதியில் வைத்து ஐந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ள நிலையில் 17ம் திகதி ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தகசவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மிரிஸ்ஸ பகுதியில் டச்சு சுற்றுலாப் பயணிகள் தாக்குதலுக்குள்ளாகியிருந்ததன் தொடர்ச்சியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment