கொழும்பு பேர வாவி மற்றும் மெனிக் கங்கையிலிருந்து இரு வேறு வர்த்தகர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பேர வாவியிலிருந்து மீட்கப்பட்ட சடலம் மோசமான முறையில் பழுதடைந்துள்ள அதேவேளை மெனிக் கங்கை பகுதிக்கு நண்பர்களுடன் சென்றிருந்த நிலையிலேயே 51 வயது நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் மஹரகம பகுதியைச் சேர்ந்த குறித்த நபரோடு சென்ற நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment