சிரியா மீதான அமெரிக்காவின் தன்னிச்சையான தாக்குதலை கண்டிக்கும் நோக்கில் ரஷ்யாவின் அழைப்பில் கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் குறித்த விவகாரத்தை கண்டிக்க மறுத்துள்ளது.
இரசாயன தாக்குதல் நடந்ததா இல்லையா என்பதா தொடர்பில் ஆராய சர்வதேச பரிசோதனையாளர்கள் இன்றைய தினம் சிரியா சென்றுள்ள நிலையில் அவசர அவசரமாக அமெரிக்கா - யு.கே - பிரான்ஸ் கூட்டுத் தாக்குதலை நடாத்தியிருந்தமை குறித்து ரஷ்யா கேள்வியெழுப்பியிருந்தது.
பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா வீட்டோ செய்து வரும் வழமை போன்று சிரியாவுக்கு எதிரான தீர்மானங்களை ரஷ்யா வீட்டோ செய்யும் வழமையுண்டு. இந்நிலையிலேயே பாதுகாப்பு கவுன்சிலை மீறி இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமையும் அதனை கவுன்சில் கண்டிக்கத் தவறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment