ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து மஹிந்த ஆட்சியின் கொலை, கொள்ளைக் குற்றச்செயல்களின் பட்டியலால் கூட்டு எதிர்க்கட்சி திணறிப்போயுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான தனதுரையின் போதே ராஜித சேனாரத்ன, மஹிந்த ஆட்சியில் மிக் மோசடியில் ஆரம்பித்து பிரபல கொலைகளை பட்டியலிட்டு வருவதுடன் குறுக்கே பேசும் ஒவ்வொரு கூட்டு எதிர்க்கட்சி நபர் தொடர்பிலும் தனிப்பட்ட ஊழல்களை வெளியிட்டதனால் சபை அமர்க்களப்பட்டுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்கும் முறைகளையும் தவறி திணறிப்போன நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு வருகின்றமையும் இன்னும் சில நிமிடங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment